Thursday, January 16, 2025
24.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டு949 தங்க முலாம் பூசப்பட்ட மணிகளுடன் நால்வர் கைது

949 தங்க முலாம் பூசப்பட்ட மணிகளுடன் நால்வர் கைது

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் நுழைவாயிலில் கார் ஒன்றை சோதனையிட்டபோது, ​​949 சிறிய தங்க நிற மணிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

அத்துடன் 4 சந்தேக நபர்களும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் குழுவொன்று நேற்றிரவு (15) தெற்கு அதிவேக வீதியின் நுழைவாயிலில் விசேட வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது, குறித்த கார் சோதனைக்குள்ளாக்கப்பட்டதில், மறைத்து வைக்கப்பட்டிருந்த 949 தங்க முலாம் பூசப்பட்ட சிறிய மணிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

சந்தேக நபர்கள் வெலிகம பிரதேசத்தில் உள்ள தமது நண்பரின் வீட்டிற்கு செல்ல வந்ததாகவும், அங்குள்ள பித்தளை விளக்குகளை சரிசெய்வதற்காக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கண்டி பிரிமத்தலாவ பிரதேசத்தில் உள்ள கடையொன்றில் தங்க முலாம் பூசப்பட்ட சிறிய மணிகளை கொள்வனவு செய்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை வெலிகம பொலிஸார் மாத்தறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles