8 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 15 வயது சிறுவன் ஒருவர் ஆரச்சிக்கட்டுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பங்கதெனிய – கோட்டபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த தரம் 08 இல் கல்வி கற்கும் சந்தேக நபரான சிறுவன், கடந்த 14ஆம் திகதி மதியம் சிறுமியை வன்புணர்ந்துள்ளதாக சிறுமியின் பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேக நபரான சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாக கூறப்படும் சிறுமி, மருத்துவ பரிசோதனைக்காக சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை ஹலவத்தை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.