Thursday, January 16, 2025
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டு56,000 சிறுவர்கள் போசணை குறைபாட்டால் பாதிப்பு

56,000 சிறுவர்கள் போசணை குறைபாட்டால் பாதிப்பு

இலங்கையில் 56,000 சிறுவர்கள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தைத் தணிக்கும் துறைசார் மேற்பார்வைக் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (யுனிசெஃப்) வெளியிட்ட ஆய்வறிக்கையில் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தைத் தணிக்கும் துறைசார் மேற்பார்வைக் குழு தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள குடும்பங்களில் சுமார் மூன்றில் ஒரு பங்கு பகுதியினர் பாதுகாப்பான ஊட்டச்சத்து பொருட்களைப் பெறுவதற்கான வாய்ப்பு இல்லை என ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles