Thursday, January 16, 2025
26 C
Colombo
செய்திகள்உலகம்ஹமாஸ் உடனான போர்நிறுத்த ஒப்பந்தம் - மறுக்கும் இஸ்ரேல்

ஹமாஸ் உடனான போர்நிறுத்த ஒப்பந்தம் – மறுக்கும் இஸ்ரேல்

ஹமாஸ் உடனான போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்த செய்திகளை இஸ்ரேல் நிராகரித்துள்ளது.

இந்த அறிவிப்பை இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளதாக CNN, ALJAZEERA மற்றும் REUTERS செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, காஸா பகுதியில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே நடைபெற்று வரும் கடும் சண்டையில் போர் நிறுத்தம் இருக்காது என இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை, இஸ்ரேலின் தெற்கு காசா பகுதியில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினால் வன்முறை மற்றும் காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது.

சுமார் 1,500 இஸ்ரேலிய குடிமக்கள் உயிர் இழந்தனர். பாலஸ்தீனம் குழந்தைகளையும் பெண்களையும் பணயக்கைதிகளாக பகிரங்கமாக கொல்ல நடவடிக்கை எடுத்தது.

இது தொடர்பான புகைப்படங்கள் கூட ஹமாஸ் அமைப்பு மற்றும் அதன் நட்பு கணக்குகளால் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன. இதற்கு பதில் கடுமையாக இருக்கும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.

ஹமாஸ் பயங்கரவாதக் குழுவை அழிப்பதற்காக காசா பகுதிக்குள் விரைவில் நுழையும் என்று இஸ்ரேல் பாதுகாப்புப் படைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் போர் நிறுத்த உடன்படிக்கைக்கு மனிதாபிமான உதவிகளை ரஃபா எல்லை வழியாக காசாவிற்கு செல்ல அனுமதித்துள்ளன.

ஆனால், இதை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் மறுத்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles