நாவின்ன – விஜேராம பகுதியில் உள்ள பாடசாலையொன்றின் சுவர் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் பாலர் வகுப்பு மாணவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
பாடசாலைக்கு சொந்தமான கட்டடம் ஒன்றின் சுவரே இவ்வாறு இடிந்து வீழ்ந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் படுகாயமடைந்த மாணவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.