தென் மாகாணத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கான இரண்டாம் தவணை பரீட்சை இன்று ஆரம்பமாகியது.
கடந்த வாரம் நடைபெறவிருந்த பரீட்சைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண கல்வி திணைக்கள அலுவலகம் தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு வாரங்களாக காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக அனைத்து பரீட்சைகளும் பிற்போடப்பட்டன.
சீரற்ற காலநிலையால் இன்னும் இடம்பெயர்ந்த மாணவர்களுக்கும் இன்று வகுப்புகளுக்குச் செல்ல முடியாத மாணவர்களுக்கும் தனித்தனியான விதிமுறைப் பரீட்சைகள் நடத்தப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.