விசாரணைகளுக்காக தோண்டியெடுக்கப்பட்ட வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் சடலத்தை அடக்கம் செய்ய, அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (16) அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, கொழும்பு ஜாவத்தை மயானத்தில் அவரின் மனைவியால் கொள்வனவு செய்யப்பட்ட காணியில் அவரது சடலத்தை அடக்கம் செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய உத்தரவிட்டுள்ளார்.
ஷாஃப்டரின் மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய நிபுணர் மருத்துவக் குழு தகனம் செய்வது பொருத்தமற்றது என முன்வைத்த பரிந்துரைகளை பரிசீலித்த அவர் இந்த உத்தரவை பிறப்பித்தார்.