தலைமன்னார் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 15 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் பயணித்த படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
மீனவர்கள் மேலதிக விசாரணைகளுக்காகவும் அவர்களின் பாதுகாப்புக்காகவும் மன்னார் தலைநகர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களத்தின் மன்னார் அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.