Sunday, August 3, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் கந்தானை ஜெயராஜ் பலி

பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் கந்தானை ஜெயராஜ் பலி

கந்தானை – பொல்பிதிமுகலான – ஜயமாவத்தை பிரதேசத்தில் மீன் வியாபாரி ஒருவரின் வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் இன்று (16) அதிகாலை பொலிஸாருடனான துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.

சபுகஸ்கந்த பிரதேசத்தில் சுற்றிவளைப்புக்கு சென்ற போது பொலிஸாருடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஜெயராஜ் என அழைக்கப்படும் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

கடந்த 5ஆம் திகதி இந்த மீன் வியாபாரியின் வீட்டுக்கு சென்ற இனந்தெரியாத இருவர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு தப்பிச் சென்றனர்.

துப்பாக்கிச்சூட்டின் போது, ​​43 வயதான மீன் வியாபாரி, அவரது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் வீட்டில் இருந்ததுடன், சம்பவத்தின் போது யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles