உலகக்கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான போட்டி இன்று (16) நடைபெறவுள்ளது.
இப்போட்டி லக்னோவில் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இந்த போட்டியில் இருந்து இந்த வருட உலகக்கிண்ணத்தில் இலங்கை அணியை வழிநடத்தும் பொறுப்பு குசல் மெண்டிஸிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அணித்தலைவர் தசுன் ஷானக்க காயம் காரணமாக சுமார் மூன்று வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தனர்.
அவருக்குப் பதிலாக சகலதுறை வீரர் சாமிக்க கருணாரத்ன அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
காயம் அடைந்த மஹீஸ் பத்திரனவுக்கு பதிலாக லஹிரு குமார இன்றைய போட்டியில் விளையாடுவார் என தெரிவிக்கப்படுகிறது.