அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கம தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டை விட தற்போது நாடு முன்னேற்றமடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
எதிர்வரும் மாதத்தில் சர்வதேச நிதியத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட முடியும் என தாம் நம்புவதாக அவர் கூறினார்.
இதன் காரணமாக மீண்டும் அபிவிருத்தி வேலைத்திட்டத்தை ஆரம்பித்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.