Monday, November 24, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டு50 சொகுசு ரக பேருந்துகள் மீண்டும் சேவையில்

50 சொகுசு ரக பேருந்துகள் மீண்டும் சேவையில்

50 சொகுசு ரக பேருந்துகள் எதிர்வரும் 6 மாதங்களில், மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

சேவையிலிருந்து நீக்கப்பட்ட பேருந்துகளே இவ்வாறு மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

பல்வேறு தொழிநுட்ப கோளாறுகள், உதிரிபாகங்களின் பற்றாக்குறை போன்ற பிரச்சினைகள் காரணமாக தற்போது சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள பேருந்துகள், கட்டுபெத்த அதிசொகுசு ரக சுற்றுலா போக்குவரத்து சேவை நிறுவனத்தில் தரிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற பொதுநலவாய மாநாட்டின் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொள்வதற்காக அரசாங்கத்தினால், கொண்டு வரப்பட்ட 50 சொகுசு ரக பேருந்துகளே இவ்வாறு தரித்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பேருந்துகளால் நாளாந்தம் ஒரு இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான தேறிய இலாபத்தை ஈட்ட முடியும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles