தனது 12 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் தந்தையொருவர் எதிமலே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுமியின் தாயார் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் நேற்று (12) தந்தை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டில் யாரும் இல்லாத பல சந்தர்ப்பங்களில் தனது தந்தை தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமி தனது தாயிடம் கூறியுள்ளார்.
வத்தேகம, கொட்டியாகல கெகுலன பிரதேசத்தில் வசிக்கும் 42 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.