கண் சத்திரசிகிச்சைக்கான லென்ஸ்களுக்கு தட்டுப்பாடு இல்லை என தேசிய கண் வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சிந்தக படவல தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் இருந்து 5 கோடி ரூபா பெறுமதியான 5,000 லென்ஸ்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
உலக பார்வை தினத்தை முன்னிட்டு தேசிய கண் வைத்தியசாலையில் நேற்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர்,இ லென்ஸ்கள் இல்லாத காரணத்தினால் கண் சத்திரசிகிச்சைகள் ஒருபோதும் நிறுத்தப்படவில்லை என தெரிவித்தார்.
அத்துடன், இந்நாட்டில் மாதாந்தம் சுமார் 900 கண் சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு பெறப்பட்ட லென்ஸ்கள் அறுவை சிகிச்சைகளுக்காக பயன்படுத்தப்படவுள்ளன.