ஒரு நாள் மீன்பிடி படகுகளுக்கு இலவச மண்ணெண்ணெய் வழங்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டம் நேற்று (12) பேருவளை துறைமுக வளாகத்தில் ஆரம்பமானது.
சீனக் குடியரசின் உதவியுடன் மீனவர்களுக்கு இந்த மண்ணெண்ணெய் வழங்கப்படுகிறது.
கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தலைமையில் இந்த வேலைத்திட்டம் இடம்பெற்றுள்ளது.
ஒரு மீனவர் 153 லீற்றர் மண்ணெண்ணையை இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும் மேலும் இந்த எரிபொருள் கொடுப்பனவு நாடளாவிய ரீதியில் உள்ள சுமார் 28,000 மீனவர்களுக்குக் கிடைக்கும்.
டீசல் வடிவில் பெறப்பட்ட இந்த எரிபொருள் நன்கொடை ஒரு நாள் படகு உரிமையாளர்களின் தேவைக்கேற்ப மண்ணெண்ணெய்யாக மாற்றப்பட்டுள்ளது.