மியன்மாரின் பாகோவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 15,000 பேர் வீடுகளை இழந்துள்ளனர்.
மியன்மாரில் வெள்ளம் காரணமாக 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 7,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.