Monday, September 8, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமக்கள் மீது அதிக வரிகளை சுமத்த ஜனாதிபதி விரும்பவில்லை

மக்கள் மீது அதிக வரிகளை சுமத்த ஜனாதிபதி விரும்பவில்லை

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு வரி செலுத்தாதவர்களை கண்டுபிடித்து அவர்களிடமிருந்து அதிக வரி அறவிடப்பட வேண்டுமென நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அரசின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில் வருவாய் ஈட்டும் திணைக்களங்களின் வருமான இலக்குகளை விரைவாக அடைவதற்காக நிதியமைச்சில் நடைபெற்ற நிறுவனங்களின் தலைவர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மக்களிடம் இருந்து புதிய வரிகளை அறவிடுவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அனைத்து கலந்துரையாடல்களும் நாட்டின் அரச வருவாயை அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அரச வருமானம் அதிகரிக்கப்படும் என கூறி நாட்டு மக்களின் வரிச்சுமையை மீண்டும் அதிகரிக்க முடியாது எனவும், இது அரசியல் பிரச்சினையல்ல எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles