செப்டெம்பர் 20ஆம் திகதியன்று அவிசாவளை, தல்துவ பிரதேசத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த நால்வர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி இருவரைக் கொன்ற சம்பவத்தில் பிரதான சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலைச் சம்பவத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஹம்பாந்தோட்டை கட்டுவெவ சந்தி பகுதியில் நேற்று (12) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட 21 வயதுடைய சந்தேகநபர் அவிசாவளை, கலபலன கந்தவைச் சேர்ந்தவராவார்.
இவர் தற்போது வெளிநாட்டில் உள்ள பாரிய போதைப்பொருள் வர்த்தகர் மற்றும் திட்டமிட்ட குற்றங்களை செய்பவரான மன்னா ரமேஷின் உதவியாளர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர் கைது செய்யப்பட்ட போது, அவரிடம் இருந்து 6 கிராம் 100 மில்லிகிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளத.
சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக ஹம்பாந்தோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.