அடுத்த மாகாண சபைத் தேர்தலும் ஜனாதிபதித் தேர்தலும் ஒத்திவைக்கப்படாமல் நடத்தப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகப் பேச்சாளர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் உரிய நேரத்தில் இயல்பாகவே அறிவிக்கப்படும் என்பதால், அதனை ஒத்திவைக்க எந்தக் கட்சிக்கும் சந்தர்ப்பம் கிடைக்காது என அவர் மேலும் தெரிவித்தார்.