Friday, January 17, 2025
24.3 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசாதாரண தர முன்னோடி பரீட்சை ஒத்திவைப்பு

சாதாரண தர முன்னோடி பரீட்சை ஒத்திவைப்பு

கல்வி பொது தராதர சாதாரண தர முன்னோடி பரீட்சையை எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் நடாத்த ஏற்பாடு செய்யுமாறு கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்த குமார், மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகேவிற்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

தமிழ் பாடசாலைகளில் நவராத்திரி விழா சார்ந்த பூஜை வழிபாடுகள் சிறப்பாக நடைபெறும் வகையில் இம்மாதம் 23ம் திகதி முதல் நவம்பர் மாதம் 2ம் திகதி வரை நடத்த மத்திய மாகாண கல்வி திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டது

இவ் ஏற்பாடானது நவராத்திரி விழா தமிழ் பாடசாலைகளில் இடம் பெறுவதற்கு ஒரு தடையாகவிருக்கும் என்ற விடயத்தினை கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் கவனத்திற்கு மலையக ஆசிரியர் முன்னணி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்களால் எழுத்துமூலமாக கொண்டுவரப்பட்டது.

இதனால் கல்வி ராஜாங்க அமைச்சர் ஒரு நீண்ட விளக்க கடிதத்தினை மத்திய மாகாண ஆளுநர்க்கு அனுப்பி வைத்துள்ளதோடு கல்வி பொது தராதர சாதாரண தர முன்னோடி பரீட்சையை பிற் போடுமாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயத்தினை அறிந்து கொண்ட மத்திய மாகாண ஆளுநர் உடனடியாக செயற்பட்டு கல்வி பொது தராதர சாதாரண தர முன்னோடி பரீட்சையை எதிர்வரும் 25ம் திகதி ஆரம்பித்து நவம்பர் 4ம் திகதி முடிவுறும் வண்ணம் சம்மந்தப்பட்ட கல்வி அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles