Sunday, July 13, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசவுதியில் இலங்கை பெண்ணுக்கு நடந்த கொடூரம்

சவுதியில் இலங்கை பெண்ணுக்கு நடந்த கொடூரம்

வீட்டு பணிப்பெண்ணாக சவுதி அரேபியா சென்ற இலங்கையர் ஒருவர், அவர் பணிபுரிந்த வீட்டின் உரிமையாளரால் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளார்.

கொத்தடுவ, புதிய நகரில் வசித்து வந்த 45 வயதுடைய நயனா தில்ருக்ஷி என்ற பெண்ணே இந்த அசம்பாவிதத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

சுமார் 7 மாதங்களுக்கு முன்னர் தான், இந்த சம்பவத்தை எதிர்கொண்டதாக அவர் கூறினார்.

இதனால், சவுதி அரேபிய வைத்தியசாலையில் பல மாதங்களாக சிகிச்சை பெற்று வந்ததாகவும், பின்னர் பொலிஸாரின் தலையீட்டில் தான் தடுப்பு மையத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நயனா தில்ருக்ஷி கடந்த பெப்ரவரி 8 ஆம் திகதி குருணாகலில் அமைந்துள்ள வெளிநாட்டு வ‍ேலைவாய்ப்பு முகவர் நிலையத்தின் உதவியுடன் சவுதி அரேபியாவுக்கு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles