யட்டியாந்தோட்டை பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றின் தரம் 5 வகுப்பறையை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த வகுப்பறை மாணவர்களிடையே வேகமாக பரவும் கண் நோயினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
இந்த வகுப்பறையில் 13 மாணவர்களுக்கு கண் நோய் பரவியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
வகுப்பறையில் உள்ள ஏனைய மாணவர்களுக்கும் நோய் பரவுவதைக் கட்டுப்படுத்ததும் நோக்கில் இந்த தீர்மானம் பாடசாலை நிர்வாகத்தினால் எடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பின் பல பகுதிகளில் அண்மைய நாட்களில் சிறுவர்களிடையே கண் நோய் வேகமாக பரவி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.