Saturday, August 9, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டு9 ஈரானிய பிரஜைகளுக்கு ஆயுள் தண்டனை

9 ஈரானிய பிரஜைகளுக்கு ஆயுள் தண்டனை

9 ஈரானிய பிரஜைகளுக்கு ஆயுள் தண்டனை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நான்கு வருடங்களுக்கு முன்னர் மீன் பிடி கப்பல் மூலம் ஹெரோயின் போதைப்பொருளை நாட்டுக்குள் கடத்த முற்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணையின் முடிவிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இந்த உத்தரவை வழங்கினார்.

இலங்கை கைச்சாத்திட்ட சர்வதேச உடன்படிக்கையின் பிரகாரம் குறித்த சிறைத்தண்டனையை அனுபவிக்கும் வகையில் பிரதிவாதிகளை ஈரானுக்கு நாடு கடத்தவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இன்று குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது பிரதிவாதிகள் குற்றத்தை ஒப்புக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles