இரு பிரதான ஆறுகளின் பெருக்கெடுப்பினால், அதனை அண்மித்த பல தாழ் பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள வெள்ள அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கிங் கங்களை மற்றும் நிள்வல கங்களை ஆகியவற்றை அண்மித்து வசிக்கும் தாழ் பகுதி மக்கள் அடுத்த 24 மணி நேரத்துக்கு அவதானத்துடன் செயற்படவும்.
இந்த தகவலை நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஊவா, மத்திய, சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் காலை வேளையில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.