Monday, March 16, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசிறுமியின் கை அகற்றப்பட்ட சம்பவம்: மூவரை கைது செய்யுமாறு கோரிக்கை

சிறுமியின் கை அகற்றப்பட்ட சம்பவம்: மூவரை கைது செய்யுமாறு கோரிக்கை

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிறுமி ஒருவரின் கை, மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் 03 பேரை உடனடியாக கைது செய்யுமாறு நீதிமன்றத்திடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

சிறுமி சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் நேற்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் குறித்த கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய விடுதி வைத்தியர், பெண் மற்றும் ஆண் தாதி உத்தியோகத்தர்கள் ஆகிய மூவரையும் உடனடியாக கைது செய்யுமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அடுத்த வழக்கில் குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதாக நீதவான் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles