Saturday, February 21, 2026
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவாகன விபத்தில் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் பலி

வாகன விபத்தில் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் பலி

தம்புள்ளை – குருநாகல் பிரதான வீதியில் கலேவெல தலகிரியாகம பகுதியில் நேற்று (10) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த நிலையில் தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் இன்று (11) அதிகாலை உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளும் டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தம்புள்ளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எதபெதிவெவ பிரதேசத்தில் வசிக்கும் 25 வயதுடைய கான்ஸ்டபிளான சந்திமா ஜும்னி தில்ருக்ஷிஇ பெதுருதுடுவ பொலிஸில் கடமையாற்றி விடுமுறையில் சென்றவரே உயிரிழந்துள்ளார்.

தம்புள்ளை நகருக்குச் சென்று கொண்டிருந்த போதே அவர் இந்த விபத்துக்கு உள்ளாகியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles