கடனை நிலைநிறுத்துவதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு சர்வதேச நாணய நிதியம் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதியளித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் முதல் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கீதா கோபிநாத் மற்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தலைமையிலான இலங்கைக் குழுவிற்கும் மொராக்கோவில் உள்ள மராகேச்சில் நடைபெற்ற சர்வதேச நாணய நிதியம்-உலக வங்கிக் குழு சந்திப்புகளின் ஓர் அங்கமாக இடம்பெற்ற சந்திப்பின் போதே இது தெரிவிக்கப்பட்டது.
இலங்கை பல்வேறு துறைகளில் அடைந்துள்ள முன்னேற்றத்தை சர்வதேச நாணய நிதியத்தின் முதல் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் பாராட்டியதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் ஊழலுக்கு எதிரான மற்றும் நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கான தற்போதைய பணிகள் குறித்தும் இரு தரப்பினரும் கலந்துரையாடியதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.