கொட்டாஞ்சேனை – குணானந்த மாவத்தையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதலில் பலத்த காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று (09) இரவு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அதே பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இறந்தவர் அன்றைய தினம் நண்பருடன் இருந்தபோது, மற்றொரு நபருடன் மொபைல் போன் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதுடன், சந்தேக நபர் அவரை கத்தியால் குத்தியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகளை கொட்டாஞ்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
