Monday, August 18, 2025
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகெளுத்தி மீனின் முள் குத்தி ஒருவர் பலி

கெளுத்தி மீனின் முள் குத்தி ஒருவர் பலி

கெளுத்தி மீனின் விஷ முள் குத்தியதில் கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மீகஸ்வெவ, போபீயாவெவ கிராமத்தை சேர்ந்த இந்த கடற்படை வீரர் விடுமுறையில் வீட்டுக்கு வந்துள்ளதுடன், நண்பர் ஒருவருடன் எழபட்டுவெவ என்ற குளத்தில் நீராடச் சென்றுள்ளார்.

அப்போது குளத்தில் இருந்த விஷ முள்ளுடன் கூடிய கெளுத்தி மீனை கடற்படை வீரர் மிதித்துள்ளார்.

மீனின் முள் குத்தியதால் ஏற்பட்ட கடுமையான வலி காரணமாக அவர் அம்பியூலன்ஸ் வண்டியின் மூலம் மெதிரிகிரிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும் கடற்படை வீரரின் உடல் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேதப் பரிசோதனைகளுக்காக பொலன்னநறுவை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles