Monday, March 16, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமட்டக்களப்பில் பயங்கரவாத - நிகழ் நிலை காப்பு சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பில் பயங்கரவாத – நிகழ் நிலை காப்பு சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம், நிகழ் நிலை காப்புச் சட்டத்தை அரசாங்கம் மீளப்பெறவேண்டும் என கோரி மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் வலையமைப்பின் ஏற்பாட்டில் இன்று (9) இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது உயிர்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நீதி கோரியும், அனைத்து மனித ஊரிமை மீறல்களுக்கு பொறுப்பு கூறலை உறுதிபடுத்துமாறும், நிகழ் நிலை காப்புச்சட்டத்தை முன்மொழிவதை மீளப்பெறுமாறும், ஊடக சுதந்திரம் மற்றும் சுயாதீனம் வேண்டும் எனவும், தகவல்களை அறிவதற்கும் கருத்து சுதந்திரத்திரம் அடிப்படை உரிமையாகும் என தெரிவித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles