Saturday, April 11, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபடகு கவிழ்ந்து விபத்து: இருவர் பலி

படகு கவிழ்ந்து விபத்து: இருவர் பலி

மட்டக்களப்பு – நாவலடி பகுதியில் அமைந்துள்ள வாவியொன்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரு இளைஞர்கள் உயிரிழந்தனர்.

இச் சம்பவம் நேற்று (08) மாலை இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டு, சீலாமுனையைச் சேர்ந்த தவசீலன் கிருசான்தன் (19 வயது), மாமாங்கத்தைச் சேர்ந்த பிரபாகரன் பிருந்தயன் (18 வயது) ஆகிய இளைஞர்களே உயிரிழந்தவர்கள் ஆவார்.

குறித்த படகு விபத்தின் போது, படகில் பயணித்த மேலும் நான்கு இளைஞர்கள் நீந்திக் கரை சேர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles