உலக சந்தையில் தங்கத்தின் விலை திடீரென அதிகரித்துள்ளது.
தற்போது தங்க விலையானது அவுன்ஸுக்கு 16.57 டொலர் அதிகரித்து, 1849.77 டொலராக நிலவுகிறது.
எவ்வாறாயினும் கடந்த 30 நாட்களில் உலக சந்தையில் தங்கத்தின் விலை 80 டொலர்கள் வீழ்ச்சியடைந்துள்ளது.
தற்போது ஏற்பட்டுள்ள இந்த விலையேற்றம், உள்நாட்டு சந்தையிலும் தாக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சனிக்கிழமை கொழும்பு செட்டியார் தெருவில் 24 கரட் தங்கம் 165,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் 152,500 ரூபாவாகவும் நிலவியன.