ஜப்பானின் பல கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜப்பானின் டோரிஷிமா தீவு அருகே நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமாமி தீவுகள் மற்றும் டோக்கியோவிற்கு அருகிலுள்ள சிபா மாகாணத்தின் கிழக்குப் பகுதிகள் வரை இந்த அபாய அறிவிப்புகள் நடைமுறையில் இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
டோரிஷிமா தீவுக்கு அருகில் ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி இன்று (09) அதிகாலை பதிவாகியுள்ளது.
தற்போது கூட சில தீவுகளில் இரண்டு அடி உயரத்திற்கு அலைகள் தோன்றியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.