Saturday, November 16, 2024
23 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகொழும்பில் டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு

கொழும்பில் டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு

கொழும்பின் 4 பிரதேசங்களில் டெங்கு நோயாளர்கள் அதிகரித்து வருவதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.

நாரஹேன்பிட்டி, கிருலப்பனை, மோதர மற்றும் மட்டக்குளிய பிரதேசங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அதன் பிரதம வைத்திய அதிகாரி டொக்டர் ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.

மூன்று வாரங்களுக்கு முன்னர் இந்தப் பிரதேசங்களில் நாளாந்தம் சுமார் இரண்டு டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 5 அல்லது 6 ஆக உயர்ந்துள்ளதாக வைத்தியர் ருவன் விஜயமுனி குறிப்பிட்டார்.

இது தொடர்பில் மக்கள் அக்கறையுடன் செயற்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles