Saturday, April 11, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅரச சேவையில் புதிய ஆட்சேர்ப்பு இனி இல்லை

அரச சேவையில் புதிய ஆட்சேர்ப்பு இனி இல்லை

எதிர்காலத்தில் அரச சேவையின் மிகவும் அத்தியாவசியமான பகுதிகளைத் தவிர அரச துறையில் எந்தவொரு வேலைக்கும் புதிய ஆட்சேர்ப்பு இடம்பெறாது என அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

அரச சேவையானது அரசாங்கத்திற்கு தாங்க முடியாத பிரச்சினையாக மாறியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

15 இலட்சம் அரசு ஊழியர்கள் உள்ளனர். நாட்டின் மக்கள் தொகை 21 மில்லியன். மக்கள் தொகையில் சராசரியாக 12 பேருக்கு ஒரு அரசு ஊழியர் உள்ளனர்.

இது உலகின் மிக உயர்ந்த அரசு ஊழியர்களின் விகிதங்களில் ஒன்றாகும். எனவே இது பெரிய சுமை இனி அதை செய்ய முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles