இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தையடுத்து மீட்பு பணிகள் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது.
இந்த அனர்த்தம் காரணமாக 21 பேர் உயிரிழந்துள்ளதாக இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது.
22 இராணுவ வீரர்கள் உட்பட 100 க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.
வெள்ளத்தினால் பல பாலங்கள் சேதடைந்துள்ளதுடன், சுங்தாங் அணையும் இடிந்துள்ளது.
அனர்த்தம் காரணமாக 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.