Friday, March 27, 2026
32.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவகுப்பறையின் கூரையில் இருந்த மின்விசிறியில் மோதுண்டு சிறுவன் பலி

வகுப்பறையின் கூரையில் இருந்த மின்விசிறியில் மோதுண்டு சிறுவன் பலி

புஸ்ஸல்லாவை பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் வகுப்பறையின் கூரையில் பொருத்தப்பட்டிருந்த மின்விசிறியில் மோதுண்டு பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.

குறித்த மாணவன் சக மாணவர்களுடன் மேசை மீது ஏறி விளையாடியபோது, இயங்கிக்கொண்டிருந்த மின்விசிறியில் மோதுண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்துஇ காயமடைந்த அவர் புஸ்ஸல்லாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன்,மேலதிக சிகிச்சைகளுக்காக கம்பளை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்த சிறுவன் கிலென்லொக் பகுதியைச் சேர்ந்த 14 வயதுடையவராவார்.

சம்பவம் தொடர்பில் புஸ்ஸல்லாவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles