Friday, March 27, 2026
32.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபல்கலைக்கழக விண்ணப்பங்களை ஏற்கும் செயற்பாடு இன்றுடன் நிறைவு

பல்கலைக்கழக விண்ணப்பங்களை ஏற்கும் செயற்பாடு இன்றுடன் நிறைவு

பல்கலைக்கழகங்களுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் செயற்பாடு இன்றுடன் (05) முடிவடைவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் 14ஆம் திகதி முதல் மூன்று வாரங்களுக்கு ஒன்லைன் முறை மூலம் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

அதன்படி விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது இன்றுடன் பின்னர் நீடிக்கப்படாது என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகள் கடந்த செப்டம்பர் மாதம் 4ஆம் திகதி வெளியிடப்பட்ட நிலையில் இதில் சித்தியடைந்து பல்கலைக்கழகங்களுக்கு தேர்வான மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles