இந்தியா உட்பட பல நாடுகளில் தற்போது பரவி வரும் நிபா வைரஸ் காரணமாக பன்றி இறைச்சி நுகர்வு குறைந்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக பன்றி இறைச்சி உற்பத்தியாளர்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக விவசாய அமைச்சின் கால்நடை அபிவிருத்தி பிரிவின் அதிகாரிகள் விவசாய அமைச்சரிடம் தெரிவித்துள்ளனர்.
நிபா வைரஸ் அபாயம் குறித்து கருத்து தெரிவித்த கால்நடை திணைக்கள அதிகாரிகள், இலங்கைக்குள் வைரஸ் பரவும் அபாயம் இல்லை எனவும், எனவே பன்றி இறைச்சியை உட்கொள்வது தொடர்பில் அச்சப்பட தேவையில்லை எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
நிபா வைரஸ் ஒரு ஜூனோடிக் நோய். பாதிக்கப்பட்ட பன்றிகள், அவற்றின் திசுக்கள், உடல் திரவங்கள் மற்றும் மலம் ஆகியவற்றுடன் பாதுகாப்பற்ற தொடர்பு மூலம் வைரஸ் மனிதர்களுக்கு பரவுகிறது.
எவ்வாறாயினும், இலங்கையில் இதுவரை இந்நோய் பதிவாகாததாலும், சுகாதாரத் திணைக்களம் நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கடுமையாக அமுல்படுத்தி வருவதாலும் நிபா வைரஸ் எமது நாட்டிற்குள் நுழைவதற்கான சாத்தியக்கூறுகள் மிகக் குறைவு என விவசாய அமைச்சு தெரிவிக்கின்றது.