சவால்களுக்கு முகங்கொடுத்து நாட்டை விட்டு வெளியேறுவதா இல்லையா என்பதை படித்த மற்றும் புத்திசாலி மனித வளம் தீர்மானிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (04) நடைபெற்ற சேர் ஜெனரல் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் வருடாந்த பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
தற்போதைய பொருளாதாரச் சவாலில் இருந்து இலங்கையை விடுவித்து போட்டிப் பொருளாதாரத்திற்கு இட்டுச் செல்வதற்கு நாட்டின் மனித வளம் அதற்காக அணிதிரட்டப்பட வேண்டும்.
மேலும்ஆபூகோள நிலவரங்களை அவதானிக்கும் போது எதிர்வரும் ஐந்து வருடங்களில் உலகில் பல மாற்றங்கள் ஏற்படக்கூடும் எனவும் அபிவிருத்தியடைந்த நாடுகள் கூட எதிர்காலத்தில் பொருளாதார சவால்களுக்கு முகம் கொடுக்கக் கூடும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.