Friday, March 27, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுடிசெம்பரில் ஒரு கிலோ கோழி இறைச்சி 850 ரூபாவுக்கு

டிசெம்பரில் ஒரு கிலோ கோழி இறைச்சி 850 ரூபாவுக்கு

எதிர்வரும் டிசெம்பர் மாதத்திற்குள் கோழி இறைச்சியின் விலையில் மாற்றம் செய்யப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்படி, ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சியை 850 ரூபாவிற்கு வழங்க எதிர்பார்ப்பதாக வர்த்தக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கால்நடை தீவனத்திற்கு வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ள நிலையில், கோழிப்பண்ணை உற்பத்தியாளர்களும் மக்களுக்கு சலுகைகளை வழங்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தேவைப்பட்டால் முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டும் எனவும் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles