ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மத்தும பண்டார நாடாளுமன்றத்தில் என்னை பெண் நாய் (bitch) என கூறினார். இது வார்த்தை ரீதியிலான துஷ்பிரயோகமாகும். இது நாட்டிலுள்ள 52 வீதமான பெண்களையும் அவமதிக்கும் செயலாகும். பெண்கள் தான் பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்கின்றார்கள் என இராஜாங்க அமைச்சர் டயனா கமகே குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த எம்.பி க்களுக்கு பெண்களை அவமதிப்பதற்கான உரிமை கிடையாது. அவர் சிறப்புரிமைக்குழுவின் முன் கொண்டு வரப்பட்டு கடுமையாக விசாரிக்கப்பட வேண்டும்” எனவும் அவர் தெரிவித்தார்.
“என்மீது வன்மமுள்ள சில ‘பண்டார’க்கள் எதிர்க்கட்சியில் இருக்கின்றனர். ஒரு ஆணின் கடமைகளை அவர்களால் சரிவரச் செய்ய முடியாது.
எனது புடவைகளில் ஒன்றை மத்தும பண்டாரவிற்கு என்னால் தர முடியும். அவர் அதை அணிந்து கொண்டு பெண்களின் வேலைகளை செய்யட்டும். நான் அவரது காற்சட்டையை அணிந்து ஆணின் வேலைகளை செய்வேன்.
என்னையோ அல்லது வேறு பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களையோ அவமதிக்கும் செயலில் மத்தும பண்டார ஈடுபட்டால் அவர் என்னிடமிருந்து நல்ல அடியைப் பெறுவார்” என அவர் மேலும் தெரிவித்தார்.