Saturday, November 16, 2024
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசீசன் அல்லாத காலத்தில் சிவனொளிபாதமலைக்கு செல்வோரிடம் கட்டணம் அறவீடு

சீசன் அல்லாத காலத்தில் சிவனொளிபாதமலைக்கு செல்வோரிடம் கட்டணம் அறவீடு

சீசன் அல்லாத காலத்தில் ஹட்டன் மற்றும் இரத்தினபுரி வீதிகள் ஊடாக சிவனொளிபாதமலைக்கு வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தினால் நேற்று (04) முதல் பணச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

அரச காலத்தில் இருந்து சீசன் மற்றும் சீசன் இல்லாத காலங்களில் சிவனொளிபாதமலைக்கு வரும் யாத்ரீகர்களிடம் பணம் வசூலிக்கப்படவில்லை என்றும், தற்போது அவ்வாறு பணம் வசூலிப்பது
அநீதியானது என பென்கமுவ தம்மதித்த தேரர் தெரிவித்தார்.

பூட்டானில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று இன்று (05) அதிகாலை சிவனொளிபாதமலைக்கு செல்ல தன்னிடம் அனுமதி பெற்றதாகவும், நல்லத்தண்ணி பகுதியில் அந்த சுற்றுலாப் பயணிகளுக்கு வனவிலங்கு பாதுகாப்பு அலுவலகம் பயணச்சீட்டு வழங்கியதாகவும் அவர் வலியுறுத்தினார்.

குறித்த பயணச்சீட்டுக்காக ஒவ்வொருவரிடமும் இருந்து 5 டொலர்கள் வசூலிக்கப்பட்டுள்ளது. அத்துடன் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளிடமிருந்து 40 ரூபா வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிவனொளிபாதமலை இரத்தினபுரி மற்றும் ஹட்டன் வீதியில் உள்ள படிகள் உட்பட யாத்ரீகர்களுக்கு தேவையான உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு தாம் உழைத்துள்ளதாகவும், அங்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் எவ்வித ஆதரவையும் வழங்கவில்லை எனவும் தேரர் தெரிவித்துள்ளார்.

சீசன் காலத்தில் ஸ்ரீ பாதஸ்தானத்திற்கு வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு 2022 ஆம் ஆண்டு பயணச்சீட்டுகளை வழங்குவதற்காக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் வர்த்தமானியை வெளியிட்டுள்ளதாக நல்லதண்ணி வனவிலங்கு பாதுகாப்பு அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வர்த்தமானியின் பிரகாரம், நேற்று (04) பிற்பகல் முதல், நல்லதண்ணி ஊடாக சிவனொளிபாதமலைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு 5 டொலர்களும், சார்க் நாடுகளில் இருந்து வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு 4 டொலர்களும் அறவிடுமாறு வனஜீவராசிகள் திணைக்களத்தின் உயர் அதிகாரிகளிடமிருந்து அறிவுறுத்தல்களைப் பெற்றுள்ளனர்.

உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு 40 ரூபா கட்டணமாக அறவிடப்படும் என்றும், இந்த டிக்கெட்டுகள் சீசன் அல்லாத காலங்களில் மட்டுமே வழங்கப்படும் என்றும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles