Saturday, March 28, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇந்தியா - இலங்கைக்கு இடையிலான பரீட்சார்த்த கப்பல் போக்குவரத்து ஆரம்பம்

இந்தியா – இலங்கைக்கு இடையிலான பரீட்சார்த்த கப்பல் போக்குவரத்து ஆரம்பம்

இந்தியாவின் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறை துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

அத்துடன், கேரளா மாநிலத்தின் கொச்சி துறைமுகத்தில் இருந்து நாகப்பட்டினம் துறைமுகத்துக்கு கப்பல் ஒன்று நேற்று இரவு புறப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த கப்பல் இன்று நாகப்பட்டினம் துறைமுகத்தை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கப்பல், நாகப்பட்டினம் துறைமுகத்தை வந்தடைந்ததும் நாளை காங்கேசன்துறை துறைமுகத்துக்கான பயணிகள் கப்பல் போக்குவரத்து, சோதனை முறையில் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அனைத்து நிர்மாணப்பணிகளும் நிறைவுப்பெற்று ஜனவரி மாதம் முதல் இந்தியாவிற்கும் இலங்கைக்குமான பயணிகள் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles