Thursday, December 18, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇன்றும் தாமதமான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம்

இன்றும் தாமதமான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம்

தாய்லாந்தின், பெங்கொக் நகருக்கு புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானம் 10 மணி நேரத்திற்கும் அதிகமாக தாமதமாகியுள்ளது.

ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸின் UL-402 என்ற விமானம் இன்று அதிகாலை 01.10 மணிக்கு பெங்கொக்கிற்கு புறப்பட இருந்தது.

எனினும் இந்த விமானம் 10 மணித்தியாலங்கள் 27 நிமிடங்கள் தாமதமாக இன்று முற்பகல் 11:37 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து பெங்கொக் நோக்கி புறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், பங்கொக்கில் இருந்து இன்று காலை 10.40 க்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL-403 விமானம் குறிப்பிட்ட வருகை நேரம் இன்றி தாமதமானது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து தாமதமாக புறப்பட்ட விமானம் தாய்லாந்து சென்று திரும்பி வரவேண்டிய நிலை ஏற்பட்டமையே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles