Saturday, November 16, 2024
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநாமலின் 26 இலட்ச ரூபா மின் கட்டணத்தை சனத் நிஷாந்த செலுத்தினார்

நாமலின் 26 இலட்ச ரூபா மின் கட்டணத்தை சனத் நிஷாந்த செலுத்தினார்

நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த தனது மின் கட்டணத்தை செலுத்தியமை தொடர்பில் அவர் தனக்கு தொலைபேசியில் அறிவித்ததன் பின்னரே தெரியவந்ததாக நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சனத் நிஷாந்தவினால் நேற்று (02) நாமலின் நிலுவை மின் கட்டணம் செலுத்தப்பட்டமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எனது பெயரில் இதுவரை எந்த மின்கட்டணம் வரவில்லை. அமைச்சர் சனத் நிஷாந்த மின்சார சபைக்கு சென்று வினவியபோது நாமல் ராஜபக்ஷ என்ற பெயரில் மின்சாரக் கட்டணம் நிலுவை இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனினும் சனத் நிஷாந்த தனது திருமண வைபவம் தொடர்பான கட்டணத்தை செலுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

இதேவேளை, பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டை அபிவிருத்தி செய்த மகத்தான தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு மரியாதை மற்றும் நன்றியை தெரிவிக்கும் வகையில் இந்த மின் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்திருந்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles