கை, கால்கள் மற்றும் தலையின்றி சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் சபுகஸ்கந்த பொலிஸ் நிலையத்தில் நேற்று பிற்பகல் சரணடைந்துள்ளார்.
பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளுக்கமைய, குறித்த சந்தேகநபருக்கு சொந்தமானதென கருதப்படும் கார் ஒன்று நுவரெலியா – சந்ததென்ன விகாரைக்கு அருகிலிருந்து மீட்கப்பட்டது.
கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபருக்கு உதவியதாகக் கூறப்படும் நபரும் பொலிஸில் சரணடைந்துள்ளார்.
சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் சியம்பலாப்பே தெற்கில் வசிக்கும் 53 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
சம்பவத்தின் இரண்டாவது சந்தேக நபரான 48 வயதுடைய நபரும் அதே பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் பாகங்களை வெட்டுவதற்கு சந்தேகநபர், பிரதான சந்தேக நபருக்கு உதவியதாக மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.