Friday, July 4, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டு500 மில்லியன் ரூபா பெறுமதியான வல்லப்பட்டை மீட்பு

500 மில்லியன் ரூபா பெறுமதியான வல்லப்பட்டை மீட்பு

பாணந்துறை, வலான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 50 கிலோவுக்கும் அதிகம் எடை கொண்ட வல்லப்பட்டை கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன் பெறுமதியானது சுமார் 500 மில்லியன் ரூபா எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

63 வயதுடைய நபரொருவரினால் உரிய ஆவணங்கள் இன்றி சொகுசு காரில் இவை கொண்டு செல்லப்பட்ட போதே கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட வல்லப்பட்டையுடன் கைதான சந்தேக நபர், களுத்துறை வடக்கு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் அரச வங்கியொன்றின் ஓய்வுபெற்ற முகாமையாளர் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles