Saturday, April 11, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமுல்லைத்தீவு நீதவான் நாட்டை விட்டு வெளியேறியமை தொடர்பில் விசாரணை

முல்லைத்தீவு நீதவான் நாட்டை விட்டு வெளியேறியமை தொடர்பில் விசாரணை

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியும் நீதவானுமான டி.சரவணராஜா நாட்டை விட்டு வெளியேறியமை தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் விசேட உத்தரவை பிறப்பித்துள்ளார்.

குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு நீதவான் டி.சரவணராஜா தனது பதவி விலகல் கடிதத்தை கடந்த 23ஆம் திகதி நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைத்து மரண அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் இருப்பதாகக் கூறியிருந்தார்.

அவர் மறுநாள் அதாவது 24ம் திகதி வெளிநாடு சென்றதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. வெளிநாடு செல்வதற்கு முன் அவர் தனது காரை விற்பனை செய்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles