Monday, April 13, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதேங்காய் திருட சென்ற நபர் மீது துப்பாக்கிச்சூடு

தேங்காய் திருட சென்ற நபர் மீது துப்பாக்கிச்சூடு

கால்நடை அபிவிருத்தி சபைக்கு சொந்தமான தோட்டமொன்றில் தேங்காய் திருட சென்ற நபர் ஒருவர் தோட்ட காவலாளியின் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்துள்ளார்.

காயமடைந்த நபர் குளியாபிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பன்னல பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (01) மாலை 5.20 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், யக்வில, ஹகவா பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நபரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.

குறித்த நபரின் இடது கை மற்றும் முதுகில் சுடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படும் சந்தேக நபர் இதுவரை கைது செய்யப்படவில்லை.

சம்பவம் தொடர்பில் பன்னல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles